முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் உள்ளார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன். இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், உடல் நலம் குன்றியுள்ள அவரது தந்தையை பார்ப்பதற்காகவும் சகோதரியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் தாய் அற்புதம்மாள் பரோல் வழங்கவேண்டி கோரினார்.
பலத்த காவல் பாதுகாப்புடன் பேரறிவாளன் இல்லம் இதனடிப்படையில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
இங்கு அவரை முறைப்படி சென்னை காவல் துறையினர் ஒப்படைத்தனர். பின்னர், சில ஆவண நடைமுறைக்குப் பிறகு பேரறிவாளன் இங்கிருந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்குச் செல்கிறார்.
திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு, ஆய்வாளர் பழனிவேல் தலைமையிலான காவல் துறையினர் பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை அழைத்துச் செல்கிறார்கள்.
இதையும் படிங்க :30 நாட்கள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்!