தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிவாளனின் தந்தைக்கு திலீபன் பார்த்த மருத்துவம்! - perarivalan

வேலூர்: பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் ஆஸ்துமா நோயினால் தொடர்ந்து அவதிப்படுவதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

kuyildhasan
kuyildhasan

By

Published : Dec 4, 2019, 5:46 PM IST

Updated : Dec 4, 2019, 6:13 PM IST

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரு மாதம் பரோலில் வந்துள்ளார். அவரது தந்தை குயில்தாசன் ஆஸ்துமா மற்றும் உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவரை மருத்துவரிடம் பரிசோதிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு, வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனைக்காகவும் பொது பரிசோதனைக்காகவும் அழைத்துச் சென்று இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது குயில்தாசன் தொடர்ந்து ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்ததால் இன்று நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருடன் பேரறிவாளன் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

பேரறிவாளன் தனது தந்தையை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு, உடனடியாக காவல்துறை பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனின் தந்தை

மேலும் குயில்தாசனை பரிசோதித்து சிகிச்சை அளித்த நாட்றம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் திலீபன் இன்று இரவுக்குள் வீடு திரும்புவார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பேரறிவாளன் !

Last Updated : Dec 4, 2019, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details