வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, தமிழ்நாடு - ஆந்திர மாநிலங்களின் எல்லையில் தகரகுப்பம் கிராமம் உள்ளது. அங்கு பூதமலை என்ற மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சி, அதனை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.
கள்ளச்சாராய ஆலையை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்! - village people
வேலூர்: காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த ஆலையை தகரகுப்பம் பொதுமக்களே களத்தில் இறங்கி அடித்து நொறுக்கினர்.
இந்த மலைப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலமுறை வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரிடம் மனு அளித்தும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றசம்சாட்டுகின்றனர். இதனால் தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியில் வாகன ஒட்டிகள், தினமும் குடிமகன்களால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
எனினும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் ஆலையை இன்று அடித்து நொறுக்கினர். பானைகள், சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்கள், ட்ரம்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்தால், போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் மக்கள் எச்சரித்தனர்.