திருப்பத்தூர் நகராட்சி சார்பில் கெளதம்பேட்டையில் பொது கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளுக்கு முறையான தண்ணீர் வசதி செய்துதர பல முறை நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும், நேரில் சென்று மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் நகராட்சி ஆணையர் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி காவல்துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.