தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இடுகாட்டிற்கு பாதை இல்லை" கொந்தளித்து எழுந்த மக்கள்! - protests in vellore

வேலூர்: இடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

people-protested-for-no-pathway-for-graveyard
people-protested-for-no-pathway-for-graveyard

By

Published : Nov 24, 2020, 6:10 AM IST

பாகாயம் அடுத்த இடையன்சாத்து இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் 126 அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் இடுகாட்டுக்கு செல்ல வழி இல்லை என பலமுறை அரசு அலுவலர்களிடம் மனு அளித்துள்ளனர்.

பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்காததால், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் மற்றும் தமிழ் புலிகள் அமைப்பினரும் இணைந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.

இவர்களை காவல் துறை தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, 4 பேர் மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:நிலக்கரி சாம்பல் கழிவால் பொசுங்கும் கால்கள்: நிவாரணம் கேட்கும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details