இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாவைத் தடுக்க 130 கோடி மக்களும் ஊரடங்குக்கு ஒத்துழைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தனியாக இருந்தாலும் நமது ஒற்றுமையை காட்டும் விதமாக ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் வீட்டில் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கு, மெழுகுவத்தி, டார்ச் லைட் ஆகியவற்றை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் வேண்டுகோளையேற்று வேலூரில் விளக்கேற்றிய பொதுமக்கள் - பிரதமரின் வேண்டுகோளையேற்று வேலூரில் விளக்கேற்றிய பொதுமக்கள்
வேலூர்: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வேலூர் மாநகரில் உள்ள பொது மக்கள், குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து வீடுகளின் முன்பு நமது பாரம்பரிய விளக்கான அகல் விளக்கை ஏற்றினர்.
![பிரதமரின் வேண்டுகோளையேற்று வேலூரில் விளக்கேற்றிய பொதுமக்கள் பிரதமரின் வேண்டுகோளையேற்று வேலூரில் விளக்கேற்றிய பொதுமக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6678468-703-6678468-1586151684872.jpg)
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நேற்று வேலூர் மாநகரில் உள்ள பொது மக்கள், குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்து வீடுகளின் முன்பு நமது பாரம்பரிய விளக்கான அகல் விளக்கை ஏற்றினர். அதேபோல் சிறுவர்கள் மெழுகுவத்தி, செல்போன் டார்ச் உள்ளிட்டவற்றையும் ஒளிரச் செய்தனர். மேலும் சிலர் தங்கள் வீட்டு மாடிகளில் நின்று மத்தாப்புக்களையும் கொளுத்தினர்.
குறிப்பாக வேலூரில் உள்ள காகிதபட்டறை குன்றின் மீதும் 9.00 மணிக்கு விளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கிராம புறங்களில் வானவேடிக்கை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.