தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கற்பூரத் தைலம் மரங்கள் வெட்டி விற்பனை: ஊராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: புயலால் சாய்ந்துவிட்டதாக கூறி கற்பூரத் தைலம் மரங்களை ஊராட்சி நிர்வாகம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கற்பூரத்தைலம் மரங்கள் வெட்டி விற்பனை
கற்பூரத்தைலம் மரங்கள் வெட்டி விற்பனை

By

Published : Dec 8, 2020, 7:23 PM IST

நிவர், புரெவி புயல்களால் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் இரண்ராயிரம் ஏக்கருக்கும் அதிகமான வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பெருமுகை ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு கற்பூரத் தைலம் மரங்கள் அதிகளவில் உள்ளன. புயல்களால் இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

கற்பூரத்தைலம் மரங்கள் வெட்டி விற்பனை

இதனை ஊராட்சி நிர்வாகம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும், நல்ல நிலையில் உள்ள மரங்களையும் வெட்டி விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details