தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலென்சில் காத்திருந்த நோயாளிகள் - Adukkamparai Vellore Government Medical College Hospital

வேலூர்: மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் ஆம்புலென்சில் காத்திருந்த நோயாளிகள், படுக்கை வசதி கிடைக்காததால் திரும்பிச் செல்கின்றனர்.

மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலென்சில் காத்திருக்கும் நோயாளிகள்
மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலென்சில் காத்திருக்கும் நோயாளிகள்

By

Published : May 13, 2021, 12:08 AM IST

அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மே 12 காலை சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலென்சுகள் இதய நோய், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக வந்திருந்த நோயாளிகளுடன் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்தன. நீண்ட நேரம் காத்திருந்தும் படுக்கை கிடைக்காததால் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து நோயாளியின் உறவினர் ஒருவர் கூறுகையில்,'நாங்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கொண்டிருக்கிறோம். போதிய ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் படுக்கை கிடைக்க தாமதமாகும் என்றும் மற்ற நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்த பிறகே படுக்கை கிடைக்கும் எனவும் கூறுகின்றனர். எனவே, தற்போது நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்' என்று கூறினார்.

மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலென்சில் காத்திருந்த நோயாளிகள்

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது (ARMO) மருத்துவமனையில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளது, அதில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் ஆகும். இது அனைத்திலும் தற்போது நோயாளிகள் உள்ளனர். இம்முறை கரோனா நோயாளிகள் மட்டுமின்றி, மற்ற நோயாளிகளும் அதிகம் மூச்சுத்திணறல் காரணமாக வருகிறார்கள். ஆகவே, அனைவருக்குமே ஆக்சிஜன் இணைப்பு தேவைப்படுகிறது. இதனால் தான், நோயாளிகளைக் காக்க வைக்கும் சூழல் உருவாகிவருகிறது.

இதனைத்தடுக்க தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட தற்காலிக படுக்கைகளை அமைத்து வருகிறோம். மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கி வருகிறோம். இவைகள் உருவாக்கப்பட்டபின் இது போன்ற நோயாளிகள் காத்திருப்பு நிலை தடுக்கப்படும். மேலும் தற்காலிக படுக்கைகளில் ஆக்சிஜன் இணைப்பை செலுத்துவதற்கான உபகரணங்கள் போதிய அளவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது' என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நாய்கள் மீது தாக்குதல்: நள்ளிரவில் பீதியை கிளப்பிய இளைஞர்களால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details