வேலூர்: குடியாத்தம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது, ”ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்களின் அவசியம் உள்ள சில சட்டத்திற்குக் கால தாமதம் இல்லாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்குக் கால தாமதம் ஆனதற்கு ஆளுநர் மாளிகையும் தமிழக அரசும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.
தற்போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதைத் தாமதம் என்று கூறாமல் இருக்க முடியாது, த.மா.க சார்பாக ஆளுநருக்கு நன்றி தெரிவித்து வரவேற்கிறோம். ஆன்லைன் சூதாட்டத்தை வரும் காலத்தில் முற்றிலுமாக தடை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துப் பலியாகும் உயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.