தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் மாற்றுப்பாதையில் பயணிகள் செல்க' - District Collector Shanmugasundar

வேலூர்: சத்துவாச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிர்புறம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் பயணிகள் மாற்றுப்பாதையைப் பயன்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தினார்.

சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் மாற்றுப்பாதைக்கு பயணிகள் செல்க
சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் மாற்றுப்பாதைக்கு பயணிகள் செல்க

By

Published : Nov 4, 2020, 9:24 AM IST

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தி குறிப்பொன்றை வெளியிட்டார். அதில், 'வேலூர் சத்துவாச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.

இதனைத் தடுக்கும் வண்ணம் பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்க ரூபாய் ஒரு கோடியே 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணி நாளை(நவம்பர். 05) முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பணிகளை அடுத்த ஏழு மாதங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணியின்போது அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் பணிகள் நடைபெறும் பகுதியில் மெதுவாக செல்ல வேண்டும். மாற்றுப்பாதையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாதசாரிகள் ஏற்கெனவே அமைந்துள்ள சுரங்கப் பாதையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details