வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையில் ஈடுபட அதிமுக அமைச்சர்களும், திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் வேலூரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
வேலூர் தேர்தல் - மசூதியில் வாக்கு சேகரிப்பு - Vellore lok sabha election
வேலூர்: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம்பூரில் உள்ள மசூதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
vellore election
அதன்படி, இன்று ஆம்பூரில் உள்ள பெரிய மசூதி அருகே அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.வ.வேலுவும், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சி தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.