கரோனா தொற்று மூன்றாவது அலை செப்டம்பர் மாதத்தில் பரவும் என்றும் குழந்தைகளை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகளை வேலூர் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், "முக்கியமாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் (தாய் - தந்தை இருவரும்) கட்டாயம் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். மாதத்திற்கு ஐந்து நாள்கள் கபசுர குடிநீர் கொடுக்க வேண்டும்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் அவசியமின்றி மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தனிமையில் அரைமணிநேரம் வெயிலில் விளையாட விட வேண்டும்.
பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தற்போதுவரை ஆயிரத்து 907 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தமாக 5 ஆயிரத்து 635 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது" என தெரிவித்தார்.