வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த கார்கூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் - செல்வி தம்பதியரின் மகள் சங்கீதா (23) அதே பகுதியில் கார்கூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ள மணிமாறன் என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊராட்சி மன்ற துணை தலைவரின் இரண்டாவது மனைவி சங்கீதா(23) அதே பகுதியில் உள்ள பல நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டிக்கு பணத்தை வாங்கிய நபர்கள் பலமுறை அசல் பணத்தை கேட்டும் திரும்பி தராததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தனியாக வீட்டிலிருந்த ஊராட்சி தலைவரின் மனைவி சங்கீதா பல மணி நேரம் ஆகியும் வெளியே வராததால் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையும் படிங்க: செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மனித எலும்புக்கூடு.. தென்காசியில் பகீர் சம்பவம்!
இது குறித்து பேர்ணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சங்கீதா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்கீதா தங்கி இருந்த வீட்டின் சுவற்றில் ’தனது சாவிற்கு காரணம் அந்த ஐந்து பேர்’ என எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது கணவரும் தன்னைப் பார்க்க வருவதில்லை என சங்கீதா அதில் எழுதி வைத்துள்ளார். இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு இரண்டு மாதங்களை ஆன பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சிறுமி மரணம் எதிரொலி.. அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்க அளவீடு பணி.. மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம்!