தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி திமுக சார்பிலும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நேற்று சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அராஜக அதிமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் கடமை- வேலூர் திமுக வேட்பாளர் - வேலூர் திமுக வேட்பாளர்
வேலூர்: அதிமுக ,பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்கள் முதல் கடமை என திமுக பொருளார் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று வேலூர் வந்த அவர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த் கூறியதாவது, "தமிழகத்தில் நடக்கக்கூடிய அராஜக அதிமுக ஆட்சியையும், மத்தியில் நடக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியையும் அகற்றுவதுதான் எங்கள் கடமை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் கூட அதுதான்.
மேலும் தமிழகத்தில் உள்ள நாற்பது தொகுதிகளும் நமதே, எல்லாத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.