சென்னையில் இருந்து மைசூரு செல்லக்கூடிய காவேரி விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய பிரிந்தாவன் விரைவு ரயிலில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே பாதுகாப்புத் துறை(RPF) மற்றும் மாவட்ட பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் நேற்று (ஏப்ரல். 26) இரவு, காட்பாடி சந்திப்பை வந்தடைந்த காவேரி விரைவு ரயில் மற்றும் இன்று (ஏப்ரல். 27) காலை வந்தடைந்த பிரிந்தாவன் ரயில் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சபர்பதி, வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.