வேலூர் மாவட்டம்அணைக்கட்டு அருகே உள்ள பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 10) ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது மழை நீர் தேங்கி இருப்பதை கவனிக்காமல் சென்ற கார், நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறியது.
அதன்பின் எதிர் திசையில் சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயனித்த மூன்று பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.