நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்( 20 ). இவர் பச்சூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் கடந்த மாதம் 13 ம் தேதி இறந்து கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், முதலில் தற்கொலையாக இருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆனந்த், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.
'ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் கழுத்தை நெறித்து கொன்றோம்..! - நண்பர்கள் பகீர் - homosex murder
வேலூர்: ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்தால் கழுத்தை நெறித்து கொன்று தண்டவாளத்தில் வீசியதாக நாட்றம்பள்ளி இளைஞர் கொலைழக்கில் கைதான நண்பர்கள் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனந்தின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்தபோது, இறுதியாக கார்த்திக் என்பவர் அழைத்துள்ளார். இதையடுத்து நாட்றம்பள்ளியை சேர்ந்த பாலாஜி, கார்த்திக் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். இதில், ஆனந்த் வாட்ஸ்அப் குரூப் மூலம் பாலாஜி( 23 ) கார்த்திக் (22) ஆகியோருடன் பழகி வந்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி அன்று நாட்றம்பள்ளிக்கு வரச் சொல்லி கார்த்திக், ஆனந்துக்கு அழைப்பு விடுத்து உள்ளார். அங்கு சென்றபோது ஆனந்தை ஓரின சேர்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். ஆனந்த் மறுத்ததால் கார்த்திக் மற்றும் பாலாஜி இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து பச்சூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கார்த்திக், பாலாஜியை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.