வேலூர்: வேலூரின் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர், ஜாபர் அலி (23).
அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று (ஜூலை 5) 7 வயது சிறுமி நொறுக்குத்தீனி வாங்க வந்துள்ளார்.
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

அப்போது சிறுமியை ஏமாற்றி கடைக்குள் அழைத்துச் சென்ற ஜாபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் ஜாபர், சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அவர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை