வேலூர்:குடியாத்தம் ராஜகோபால் நகர் பகுதியில் முன்னாள் ஆசிரியர் சண்முகம், அவருடைய மனைவி ராஜேஸ்வரி (71) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சண்முகம் நேற்றைய முன்தினம் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், ராஜேஸ்வரி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (அக்.7) ராஜேஸ்வரி வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து உள்ளார். அப்போது சாம்பிராணி போடுவதற்காக தீயிட்டுள்ளார். சாம்பிராணியில் ஏற்பட்ட தீயால் அருகே இருந்த பஞ்சு மெத்தையில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில் அச்சமடைந்த ராஜேஸ்வரி, வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் இருந்து பயங்கரமாக புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ராஜேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், கதவை உடைக்க முடியாததால், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.