தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 22, 2023, 3:37 PM IST

ETV Bharat / state

96 திரைப்பட பாணியில் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள்

வேலூரில் 96 திரைப்பட பாணியில் 97ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் பங்கு பெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

96 திரைப்பட பாணியில் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள்

வேலூர்மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி உயர் நிலைப்பள்ளியில் 1997-1998ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அதே பள்ளியில் இன்று நடைபெற்றது. மேலும், அப்பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். அவர்களுடன் உரையாடி பழைய நினைவுகளை நினைவூட்டி நெகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி மற்றும் பள்ளிக்கு நிதியுதவி அளிப்பது குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது.

மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பில் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:மச்சு பிச்சு சுற்றுலா தளத்தில் சிக்கிய 417 பேர்.. பெருவில் தொடர் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details