திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பத்மாவதி என்ற மூதாட்டியிடம், அவர் அணிந்திருந்த ஆறு சவரன் தங்கநகையை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துக்சென்றுள்ளனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் நகை பறிப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள் யார் ? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.