விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து துணை முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பத்தாண்டு காலம் அங்கம் வகித்த திமுக தமிழ்நாட்டுக்கு தேவையான எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. சேதுசமுத்திர திட்டம் என்ற பெயரில் ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் கொட்டி கரைத்தார்கள்.
காவிரி நதிநீர் பிரச்னையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார். இலங்கை தமிழர் பிரச்னையில் உண்ணாவிரத நாடகமாடி தமிழர்களை கொன்று குவிக்க உதவியாக இருந்தார்.
ஆட்சியை கவிழ்ப்பேன் என்று திரிந்த ஸ்டாலின், தினகரனின் கனவுகள் எல்லாம் பொய்த்துப்போய்விட்டது. டிடிவி தினகரன் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 18 பேரை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு தற்போது அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு தலைதூக்கிவிடும்” என்றார்.