வேலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைந்து மாவட்டத்தலைவர் பியூலா எலிசபெத் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
வேலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலை சிற்றுண்டி திட்டத்தைத் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர்கள் மூலமாகவே அரசு நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், அகவிலைப்படியை 4-5% சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க:இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் அரசு ஊழியர்கள் இருவர் பலி!