வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அளித்த எந்தவொரு வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இரண்டாயிரம் பேருக்குகூட வேலைவாய்ப்பு வழங்கவில்லை.
மோடி அயர்மேன் அல்ல, ஸ்டோன் மேன்-ஸ்டாலின் விமர்சனம்
வேலூர்: மோடி அயர்மேன் அல்ல ஸ்டோன் மேன் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
ஸ்டாலின் விமர்சனம்
தமிழக முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதால் சிபிஐ விசாரணை போன்ற பல்வேறு வழக்குகளிலிருந்து விடுபட தன்னை மத்திய அரசிடம் அடமானம் வைத்து உள்ளார். பிரதமர் மோடியை அயர் மேன் என பாஜக மற்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர். அவர் அயர் மேன் அல்ல ஸ்டோன் மேன். இவ்வாறு அவர் கூறினார்.