தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் குழந்தைகளை கடத்த முயன்ற வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! - children kidnap

பேரணாம்பட்டு அருகே குழந்தைகளை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை கடத்த முயன்ற வடமாநில இளைஞருக்கு தருமடி கொடுத்த பொதுமக்கள்
குழந்தைகளை கடத்த முயன்ற வடமாநில இளைஞருக்கு தருமடி கொடுத்த பொதுமக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 8:49 AM IST

Updated : Nov 21, 2023, 8:57 AM IST

குழந்தைகளை கடத்த முயன்ற வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

வேலூர்:பேரணாம்பட்டு அருகே குழந்தைகளை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி, மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் கிராமத்தில், அன்பரசன் மற்றும் அசோக் குமார் ஆகிய இருவரின் குழந்தைகள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வடமாநில இளைஞர்கள் மூவரில் ஒருவர் இரு குழந்தைகளையும் தூக்கிச் சென்றுள்ளார்.

இவ்வாறு குழந்தைகளை கடத்திச் செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சத்தமிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளை அங்கு விட்டு தப்ப முயன்ற வட மாநில இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, வட மாநில இளைஞரை அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:சென்னை ரேஸ் கிளப்பிற்கு வாடகை உயர்த்தப்பட்ட விவகாரம்... தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக, பேரணாம்பட்டு போலீசார் வட மாநில இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளைத் திருடிய வட மாநில இளைஞர்கள் பிடிபட்ட சம்பவம் கேட்டு மருத்துவமனையில் பொதுமக்கள் அதிக அளவு திரண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குழந்தைகளை கடத்த முயன்ற வட மாநில இளைஞர் மீது புகார் கொடுக்க வந்தவர்களிடம், பேரணாம்பட்டு போலீசார், வட மாநில இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால், புகார் அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள் புகார் கொடுக்காமல் அங்கிருந்து சென்றனர்.

இதையும் படிங்க:"உங்கள் கோபத்தை நியாயமான பிரச்சினைகளை நோக்கி திருப்புங்கள்".. கிளென் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் பதிலடி!

Last Updated : Nov 21, 2023, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details