தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து...காவல்துறை தீவிர விசாரணை - அசாம் மாநிலத்தை சேர்ந்த அபனிசரானியாக்கு கத்தி குத்து

கழுத்தில் குத்துக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வடமாநில இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாநில வாலிபருக்கு கத்தி குத்து...காவல்துறை தீவிர விசாரணை
வடமாநில வாலிபருக்கு கத்தி குத்து...காவல்துறை தீவிர விசாரணை

By

Published : Aug 23, 2022, 5:18 PM IST

வேலூர்:காட்பாடி அடுத்த காந்தி நகர், காலேஜ் ரவுண்டானாவில் உள்ள வணிக வளாகத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிக்கொண்டிருப்பதாக விருதம்பட்டு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்குச்சென்று உயிருக்குப்போராடிக்கொண்டிருந்த வடமாநில இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது அவரின் ஆதார் அட்டை சிக்கியுள்ளது. அதில் குத்தப்பட்ட நபர் 33 வயதுடைய அஸ்ஸாம் மாநிலத்தைச்சேர்ந்த அபனிசரானியா என்பது தெரியவந்தது. மேலும் இவரை அடையாளம் தெரியாத நபர் குத்திவிட்டு தப்பியோடியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருதம்பட்டு காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் அதிகம் புழங்கும் முக்கியப்பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்தில் குத்துப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details