தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 24, 2020, 8:48 PM IST

ETV Bharat / state

கரோனா ஊரடங்கு: நிதி நெருக்கடியிலிருந்து மீளும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்!

வேலூர்: கரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்திலிருந்து வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சிறிது சிறிதாக மீண்டு வருகின்றன.

corona
corona

உலகம் முழுவதும் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை நீடித்தால் பிற துறைகளிலும் பொருளாதாரத் தேக்கமடைந்து முதலீட்டின் அளவும் குறையும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடு குறைந்துள்ளது. அரசின் எதிர்மறையான பொருளாதார நடவடிக்கையால் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம், முதலீட்டு வீதமும், சேமிப்பு வீதமும் மிகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப்பில் இருந்து வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முழுமையாக மீண்டு விட்டனவா என்பது குறித்து ஈடிவி பாரத் சிறிய முயற்சியை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தை தேர்வு செய்ததன் படி வேலூரில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஆறு மாதத்தில் 15 ரூபாய் டீசல், விலை உயர்வு

கனரக வாகனங்களுக்கு லோன் வழங்கும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில் " அரசு லோன் பெற்றவர்களுக்கும், லோன் வழங்கிய நிதி நிறுவனங்களுக்கும் பல்வேறு விதத்தில் உதவிகள் புரிந்துள்ளது.

எங்கள் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சரக்கு லாரி உரிமையாளர்களே. பணத்தை திரும்ப கட்டுவதில் காலதாமதமும் சிக்கலும் ஏற்படுகிறது. காரணம் கடந்த ஆறு மாதத்தில் டீசல், விலை சுமார் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

லாரி உரிமையாளர்கள் சரக்கை ஏற்றி செல்வதற்காக பெறும் சேவை கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதால் வருவாய் குறைந்து தங்களது கடனை திருப்பி கட்ட சிரமப்படுகின்றனர். பாக்கி கடன் தொகை லோன் வழங்கிய நிறுவனத்துக்கு வராமல் இருப்பதனால் நிச்சயமாக வாராக்கடன் அதிகரித்தது தான் மிச்சம்" என்றார்.

இசிஎஸ்(ECS) முறையில் பணம் வசூலிப்பு

அவர் அளித்த பதில் சற்று ஏமாற்றத்தை தந்தாலும், இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கு லோன் வழங்கும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், "கரோனா பொதுமுடக்கத்தால் இஎம்ஐ (EMI) கட்ட தேவையில்லை, நிலைமை மாறிய பின்பு கட்டிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் பணம் வைத்திருந்தால் அப்படியானவர்களிடம் மட்டும் இசிஎஸ்(ECS) முறையில் பணம் வசூலித்து வந்தோம். சிலர் ஊரடங்கு சமயத்தில் பணத்தை திரும்ப செலுத்தாமல் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு அவர்களது பொருளாதார நிலை மாறியதும் நேரில் வந்து பணம் செலுத்தினர்.

70 விழுக்காடு அதிகரிப்பு

அவர்களும் 10 ஆயிரம் ரூபாய் கடன் செலுத்த வேண்டிய இடத்தில் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே கடனாக செலுத்தி வருகின்றனர்.

கடன் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 70 விழுக்காடு அதிகரித்திருந்தாலும் குறைவான தொகையை மட்டுமே திரும்ப செலுத்தி வருகின்றனர். எங்களுக்கும் வாராக்கடன் அதிகரித்து தான் உள்ளது" என்கிறார்.

இதையும் படிங்க:மாரடைப்பால் உயிரிழந்த காவலர்: தருமபுரியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details