கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சில மாநகரங்களில் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளதால், வேலூர் மாவட்டத்திலிருந்து, வெளிமாநிலங்கள், மாவட்டங்கள் சென்றுவர இணையம் மூலம் இதுவரை வழங்கப்பட்டுவந்த வாகன பாஸ்கள், இன்றுமுதல் வழங்கப்படாது என அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
மேலும், ”வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஆறு சோதனைச்சாவடிகளில் பொன்னை, சைனகுண்டா ஆகிய இரண்டு சோதனைச்சாவடிகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படும்.
இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும். ஆந்திராவிலிருந்து பொன்னை வழியாக வரும் வாகனங்கள், கிரிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாகவும், சைனகுண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும் செல்லுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.
பிகார், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட வெளிமாநிலத்தவரை அழைத்துச் சென்ற வாகனங்கள் திரும்பும்போது மாநில எல்லையான ஆறு சோதனைச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களில், தங்களைப் பரிசோதனை செய்துகொள்ளும்படியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடக்கூடாது: எஸ்.பி எச்சரிக்கை