நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு இன்று அதிகாலை தூக்கு தண்டனையானது நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், நிர்பயா வழக்கில் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பெண்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததால் பெண்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர் இதுகுறித்து அவர்கள், இந்த தூக்கு தண்டனை பல சட்ட போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். இது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்த வெற்றி. இனி தவறுகள் நடக்காமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நிர்பயா குற்றவாளிகளின் இறுதி நிமிடங்கள்!