வேலூர்:பள்ளிகொண்டா பகுதியைச்சேர்ந்த ரவிச்சந்திரன் - விஜயா தம்பதியினரின் மகன் கட்டடக் கலை நிபுணரான அரவிந்தராஜ். இவருக்கும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணிற்கும் இன்று(ஆக.29) காலை திருமணம் நடைபெற்றுள்ளது.
புதுமணக்கோலத்தில் பனைவிதைகளை நட்ட தம்பதியினர்... 7500 விதைகளை நடத்திட்டம் - பனைவிதைகளை நட்ட தம்பதியினர்
வேலூரில், புதுமணக்கோலத்தில் ஏரிக்கரையில் பனைவிதைகளை நட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும், பனையையும், இயற்கையையும் காக்கும் வகையில் 7500 விதைகள் நடத்திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புதுமண கோலத்தில் பனைவிதைகளை நட்ட தம்பதியினர் : 7500 விதைகளை நட திட்டம்
இந்நிலையில், இயற்கையைக் காக்கும் வகையிலும், நீர் நிலைகள் மற்றும் தமிழ்நாட்டின் மாநில மரம் மற்றும் பாரம்பரிய மரமான பனை மரத்தினைக் காக்கும் வகையிலும் திருமணம் ஆன கையோடு மணமக்கள் இருவரும் பள்ளிகொண்டா ஏரிக்கரை மீது பனை விதைகளை நட்டுள்ளனர். மேலும், இது முதல் கட்டம் என்றும்; வரும் காலங்களில் மொத்தம் 7500 பனை விதைகளை நடத்திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளனர்.
புதுமணக்கோலத்தில் பனைவிதைகளை நட்ட தம்பதியினர்... 7500 விதைகளை நடத்திட்டம்
இதையும் படிங்க: தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து... ஒருவர் காயம்