தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்த ஒரு மணி நேரத்தில் வீதியில் வீசப்பட்ட பெண் குழந்தை; வேலூரில் கொடூரம்

வேலூர்: காட்பாடி அருகே பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் சிசு மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Newly born girl child rescued from Vellore
Newly born girl child rescued from Vellore

By

Published : Jun 12, 2020, 7:56 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்ட அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பிறந்து சுமார் ஒரு மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று அங்கு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவலம் காவல் துறையினர், குழந்தையை மீட்டு அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குழந்தையை ஒரு வாரம் பரிசோதித்த பின், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு அக்குழந்தை சமூக நலத்துறை சார்பில் திருப்பத்தூரில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை வீதியில் வீசப்பட்ட கொடூரம்

பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தையை நடுரோட்டில் வீசிச் சென்றவர்களை திருவலம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் எட்டு வயது சிறுவன் கொடூரக் கொலை

ABOUT THE AUTHOR

...view details