வேலூர்:ஓட்டேரி ஏரி அருகே வாணியங்குளம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையோரம் பிறந்து சில நாட்களிலான குழந்தை ஒன்றும் அருகில் அதன் அருகில் பாட்டில் ஒன்று உடைந்த நிலையிலும் கிடந்துள்ளது. இதனைக் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து பின்னர், பாகாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "குழந்தையின் உடலானது பாட்டிலில் அடைத்து பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. பாட்டில் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளும், சில கட்டிகளும் அங்கு சிதறி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.