வேலூர்:தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்றும் இதனை காவல்துறை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் ரங்காபுரத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், ரங்காபுரத்தில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், செய்தியாளர்களிடம் பேசியதாவது, "ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீச முடியும் என்ற தைரியம் ஏற்பட்டுள்ளது.
இதனை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். எதை பண்ணாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற தைரியம், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூலிப் படைகள் அதிகரித்துள்ளது. காவல்துறையினர் மீது இருக்கின்ற பயம் குறைந்ததால் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் நடந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் காணப்பட்டது. தற்போது அவை குறைந்துள்ளது. இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் எல்லைப் பகுதியை கடக்காமல் பாதுகாப்பாக மீன்பிடிக்க செல்ல வேண்டும். இலங்கையில் சில பொருட்கள் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக எல்லை தாண்டி செல்கிறார்கள். இதனால், இலங்கை அரசு கைது செய்கிறது. இந்நிலையில், தற்பொழுது சிறை பிடித்துள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க:தீபாவளி சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை! வழக்கை விசாரிக்க அரசு உத்தரவு! என்ன நடக்கப் போகிறது?