தமிழ்நாடு

tamil nadu

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி!

By

Published : Jul 25, 2019, 8:25 AM IST

Updated : Jul 25, 2019, 10:53 AM IST

வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் நளினி ஒரு மாத கால பரோலில் வெளியே வந்துள்ளார்.

நளினி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட ஏழு பேர் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நளினி தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி நளினிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஜூலை 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நளினிக்கு ஆறுமாத பரோல் வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,

பரோலில் வெளியே வந்தார் நளினி!
  • பரோல் காலத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது,
  • அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கக் கூடாது

உள்பட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.

பரோலில் வந்தார் நளினி

இன்று காலை சரியாக 10 மணியளவில் வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் காவல் துறை வாகனம் மூலம் வேலூர் ரங்காபுரம் சிங்கராயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நளினி தனது சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோருடன் தங்குகிறார். நளினி தங்கியிருக்கும் வீட்டைச் சுற்றிலும் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நளினி தங்கவுள்ள வீடு
Last Updated : Jul 25, 2019, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details