வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகன், பெண்கள் தனிச்சிறையிலுள்ள நளினி ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று (ஜூலை 12) சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, 'தனக்கும் கணவர் முருகனுக்கும் ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி, ஏற்கனவே நளினி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி மனு அளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' பிரிவுக்கு சிறைத்துறை மூலம் மனு அனுப்பியுள்ளார்.
தொடர் விடுப்பு கேட்டு கோரிக்கை:
அதில் 'தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும், விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி இரண்டரை ஆண்டுகள் ஆகிய நிலையில் அது குடியரசுத் தலைவருக்கும் அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிவு 40 தண்டனை நிறுத்தி வைப்புச் சட்டத்தின் படி, தொடர்விடுப்பில் தன்னையும், தனது கணவர் முருகனையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.