வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள குனிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அகல்யா (15) பர்கூர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதில் சில தினங்களுக்கு முன்பு அகல்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதி காப்பாளர் அவருடைய பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
வேலூரில் மர்ம காய்ச்சல் 15 வயது மாணவி உயிரிழப்பு! - Mystery fever
வேலூர்: நாட்றம்பள்ளி பகுதியில் தொடரும் மர்ம காய்ச்சலுக்கு 15 வயது அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அகல்யாவை அவருடைய பெற்றோர் அழைத்து வந்து புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அகல்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொடர்ந்து நாட்றம்பள்ளி சுற்று வட்டாரப்பகுதியில் மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.