தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியுடன் பேச அனுமதி கேட்டு 10ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம் - வேலூர் செய்திகள்

வேலூர் : தனது மனைவி நளினியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி கேட்டு தொடர்ந்து 10 நாட்களாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதை அடுத்து, அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

murugan fasting  to video call nalini
murugan fasting to video call nalini

By

Published : Jun 10, 2020, 12:02 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்று, சுமார் 28 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், அண்மையில் இலங்கையில் உயிரிழந்த தனது தந்தையின் இறுதிச் சடங்கை காணொலி அழைப்பில் காண அனுமதி கோரியபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது தாயுடன் பேசுவதற்காக முருகன் அனுமதி கேட்டபோதும் மறுக்கப்பட்டது.

இதனிடையே, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி கோரி, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி வரை 10ஆவது நாளாக இன்று முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும், உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் சிறைத்துறை அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

பத்து நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் முருகனுக்கு உடல் சோர்வு காரணமாக இதுவரை இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றும் போது தெரியவில்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details