தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாக்சி ஓட்டுனர் கொலை: நான்கு பேர் சரண் - Crime news

வேலூர்: கடலூரை சேர்ந்த டாக்சி ஓட்டுனரை கடத்தி ஆந்திராவில் கொலை செய்த வழக்கில் 4 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

வேலூர்
வேலூர்

By

Published : Nov 24, 2020, 7:50 AM IST

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவருடைய மகன் வினோத்குமார்(27). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவரை கடந்த நவம்பர் 16ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்தி சென்றது.

இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை அருள்மொழி கடலூர் நியூ டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட வினோத்குமாரையும், கடத்திச் சென்ற 5 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராமாபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், தலை சிதைந்தபடியும் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலின் அருகில் இருந்த அடையாள அட்டையை பார்த்தபோது, அதில் வினோத்குமார் செம்மண்டலம் கடலூர் மாவட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கொலை செய்யப்பட்டவர். வினோத்குமார் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வினோத்குமார் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆரணியை சேர்ந்த கால் டாக்சி உரிமையாளர் நாராயணன்(61), சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டெல்லி(33), மகேஷ்குமார்(35), விநாயகம்(36) ஆகியோர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் 4 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆரணியை சேர்ந்த நாராயணன்(61) என்பவர் சென்னையில் கால் டாக்சி நடத்தி வருவதாகவும் அவரிடம் வேலை செய்து வந்த வினோத்குமார் நாராயணனின் மகளை காதலித்ததாகவும் இதனால் ஆந்திரம் அடைந்த நாராயணன் கூலிப்படையை வைத்து வினோத்குமாரை கடத்தி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details