தமிழ்நாட்டில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் பல இடங்களில் ஏரி ஆறு குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே மழை வேண்டி பல கோவில்களில் வழிபாடு யாகம் செய்கின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம், புத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை ஓரம் 21 அடி உயர முனீஸ்வரர் சிலை அமைத்து பொதுமக்கள் மழை வேண்டி கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜைகள் நடத்தி வழிபட்டனர். அதன்படி 24 நாட்களாக யாகசாலை அமைத்து கங்கை யமுனை உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து கலசங்களில் ஊற்றி மந்திரங்களால் உரு ஏற்றப்பட்டு அந்த புனித நீர் முனீஸ்வரர் சிலை மீது ஊற்றப்பட்டது.
மழைக்காக முனீஸ்வரன் சிலை அமைத்த கிராம மக்கள்! - prayer
வேலூர்: மழை வேண்டி ஏரிக்கரையில் 21 அடி உயரத்தில் முனீஸ்வரன் சிலை அமைத்து கிராம மக்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஏரிக்கரையில் முனீஸ்வரன் சிலை அமைத்த ஊர் மக்கள்
மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி சுற்றுவட்டார கிராம மக்கள் செய்து வழிபட்டனர். இறுதியில் கிடாவெட்டி அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.