திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், முருகேசன் ஆகியோர். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்துவந்துள்ளது.
வெங்கடேசன் - சித்ரா தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருந்தன. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசனும், மூன்று ஆண் குழந்தைகளும் இறந்துவிட்டனர். இதனால் சித்ரா தனது ஒரே மகளுடன் வறுமையில் வாடிவந்தார்.
இந்நிலையில், சித்ராவுக்கும் முருகேசனுக்குமிடையே நேற்று நள்ளிரவு மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிந்த நிலையில் அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, சித்ரா திடீரென்று அரிவாளால் முருகேசனையும் அவரது மனைவி விஜயாவையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.