வேலூர்: வேலூர் மாநகருக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்பவர், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது ஒரே மகனான ஆனந்தை மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். ஆனந்தும் தாயார் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்.
கார் ஓட்டுநராக வேலை செய்து வந்த ஆனந்த் ஒரு தீவிர அஜித் ரசிகர். நீண்ட தூரம் பைக் ரைடு மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில், கடந்த 24ஆம் தேதி திருச்சிக்கு நண்பர்களுடன் ரைடு சென்றபோது, விபத்து ஏற்பட்டு ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே மகனைப் பிரிந்த காஞ்சனா மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.