தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 12:04 AM IST

ETV Bharat / state

கௌடண்யா ஆற்றில் மூழ்கி தாய், இரு மகள்கள் உயிரிழப்பு !

வேலூர்: கௌடண்யா ஆற்றில் வேடிக்கை பார்க்கச் சென்ற தாய், இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோர்தானா அணை  கௌடண்யா ஆறு  கௌடண்யா ஆற்றில் மூழ்கி தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழப்பு  கௌடண்யா ஆறு வெள்ளப் பெருக்கு  கௌடன்ய மகாநதி ஆறு  Mother and two daughters drowned in Gautenya river  Gautenya river  Mordhana Dam
Mother and two daughters drowned in Gautenya river

நிவர் புயலின் காரணமாக வேலூர் மாவட்டம், தமிழ்நாடு ஆந்திர எல்லையோரம் உள்ள மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த வாரம் 10 ஆயிரம் கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கௌவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தற்போது, படிப்படியாக குறைந்து இன்று (நவ. 30) 1000 கனஅடி தண்ணீரே உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், போடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் மனைவி நதியா (வயது 31), அவரது இரண்டு பெண் குழந்தைகள் நிவிதா (வயது 11), அஸ்வினி (வயது 8) ஆகியோருடன் கௌடண்யா ஆற்றை வேடிக்கை பார்க்கச் சென்ற்றுள்ளார்.

அப்போது, ஆற்றுச் சூழலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மூவரையும் சடலமாக மீட்டனர்.

மேலும் இதுகுறித்து குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆற்றில் வேடிக்கைப் பார்க்கச் சென்ற தாய், இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குளத்தில் தாமரை பூ பறிக்க முயன்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி!

ABOUT THE AUTHOR

...view details