வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்ன உடையமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருக்கு நீலா என்ற மனைவியும் பவதாரணி என்ற 4 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் உதயகுமார் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதாக கூறி ரூ. 1 லட்சம் கடன் வாங்கி தரும்படி மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்துஅவரது மனைவியும் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் உதயகுமார் 5 மாதத்திற்குள் வெளிநாட்டில் இருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தது மட்டுமல்லாமல் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்துள்ளார்.
இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதையடுத்து வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும்படி கடன் கொடுத்தவர்கள் நீலாவை வற்புறுத்தியுள்ளனர். இதை தனது கணவரிடம் நீலா கூறியதற்கு மாமனார் வரதட்சனையாக கொடுத்த 5 சென்ட் நிலத்தை விற்று கடனை அடைத்துவிடலாம் என யோசனை கூறியுள்ளார்.
இதற்கு நீலா மறுப்பு தெரிவிக்கவே, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நீலா தனது 4 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.