வேலூர் மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் பாலாறில் கடந்த சில ஆண்டுகளாக மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.
இதனால் குடியாத்தம் அருகே 50-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மணல் கொள்ளையடிப்பதால் ஆற்றில் சுரங்கம் போல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்கள் இயற்கை கடனை கழிப்பதற்காக ஆற்று பகுதிக்கு செல்லும்போது மணல் கொள்ளையர்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் மழை நேரங்களில், தண்ணீர் ஆற்றைவிட்டு கரைக்கு மேல் வந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.
எனவே மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மேலும் கொள்ளையடிப்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தானர்.