தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும்தான்' - பன்வாரிலால் புரோகித் - Panwarilal Brokit latest news

வேலூர்: வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும்தான் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

Governor Panwarilal Brokit
Governor Panwarilal Brokit

By

Published : Jan 20, 2020, 4:41 PM IST

வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், "ஆசிரியர்களுக்கு கருணை, புரிதல், உருவாக்குதல் ஆகிய மூன்றும் முக்கிய மாண்புகளாகும்.

ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். எளிய வாழ்க்கைக்கு பணம் தேவைப்படாது. எனவே, மாணவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆரம்ப வாழ்க்கைதான். அதன்பின் அவர் உயர்ந்த பதவியிலிருந்தும் தன்னுடைய வாழ்க்கையில் எளிமையாக வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியபோது

வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும் முக்கியமானதுதான். எனவே நேரத்தின் முக்கியத்துவம், மனித மாண்புகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வாழும் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:புதுச்சேரிஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details