வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோதக பள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன்-கவிதா தம்பதி. இவர்களின் மகன் பரத் வருமா(18), இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பரத் வருமா அவருடைய கிராமத்திற்கு அருகே உள்ள பாசன பள்ளி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த அங்க்கியாபள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி என்பவரின் மகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் தந்தை சிவமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் பாசனபள்ளி பேருந்து நிலையம் அருகே நேற்று இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த பரத் வருமாவை வலுக்கட்டாயமாக அவர்களுடைய கிராமமான அங்க்கியா பள்ளி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த கம்பத்தில் பரத்தை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர் கட்டிவைத்து தாக்கப்பட்ட அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.