ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி கலந்துகொண்டு 114 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அதன் பின் பேசிய அவர், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மாணவிகள் உயர்கல்வி பயிலவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகின்றது.