தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறினால் மத்திய அரசு கைக்கொடுக்க தயார்' - மத்திய அமைச்சர் வி.பி.சிங் அட்வைஸ் - start up india scheme launch date

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், வி.கே.சிங், படித்த இளைஞர்கள் சுய தொழில் துவங்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Minister VK Singh participated in Thiruvalluvar University graduation ceremony and said the educated youth should start self employment instead of waiting for government jobs
இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும் - அமைச்சர் வி.கே.சிங்

By

Published : Jun 19, 2023, 4:50 PM IST

இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும் - அமைச்சர் வி.கே.சிங்

வேலூர்: காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இதில்மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் 417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் உள்பட 564 மாணவ மாணவியர்களுக்கு நோடியாக பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். மொத்தமாக 1,13,275 மாணவ மாணவியர்கள் பட்டங்களைப் பெற்றனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங், 'பட்டங்களைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அதற்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

நம் நாட்டின் வளர்ச்சி பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். குறிப்பாக, இளைஞர்கள் தொழில் முனைவர்களாக மாறினால் உங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும் என்றும் தொழில் முனைவோர்களாக மாறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருவதாகவும் கூறினார். ஆகவே, அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், இந்தியா மற்ற நாடுகளைவிட சுயதொழில் தொடங்குவதில் முதலிடத்தில் உள்ளதாக பெருமிதம் கூறியதோடு, இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும், கரானா காலத்திற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் எனவே, மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதனிடையே குறிப்பாக, படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலையை நம்பி இருக்க வேண்டாம் என்றும் ஒட்டு மொத்தமாக நான்கு சதவீதம் அளவிற்கு அரசு துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் இளம் தலைமுறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில், இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்களில் இருந்த நிலையில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், தற்போது 80 ஆயிரம் சுயதொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளதாக விவரித்தார். எனவே, இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளித்து வருவதாகவும், ஸ்டார்ட் அப் இந்தியா (Start Up India), ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் (Stand Up India projects) தொழில்களை தொடங்கி தொழில் முனைவர்களாக மாறலாம் என்றும் அதற்கான நிதியினையும் மத்திய அரசு வழங்கி வருவதாகவும்' அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மோடிக்கும் பயப்பட மாட்டோம் "ED"க்கும் பயப்பட மாட்டோம் - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details