திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பாடி பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டு திடலில், மாவட்ட விளையாட்டுக் கழகத் தலைவர் சீனிவாசன் தலைமையில் வாலிபால் விளையாட்டு கோப்பைக்கான புதிய கோப்பை அறிமுகம், போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.