தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதால் பிரச்னை இல்லை'

வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கேசி வீரமணி

By

Published : Jun 22, 2019, 4:38 PM IST

வேலூரில் இன்று அமைச்சர் கே.சி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுகவைச் சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியாக போராட்டங்களை அறிவித்து குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுவதாக பொய் பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறார்கள். இன்று திமுகவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலூர் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகத்தை பற்றி கொச்சைப்படுத்தி பேசியுள்ளனர்.

அதிமுகவைப் பொறுத்தவரை இதில் உள்ள அனைத்து தொண்டர்களும் பக்திமான்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள். சென்னையில் குடிநீர் சிக்கலுக்காக திமுக போராட்டம் நடத்துகிறார்கள். அதிகம் மழையோ புயலோ வந்துவிட்டால் அதிமுக அரசுதான் காரணம் என்கிறார்கள்.

மழை வராவிட்டாலும் அதிமுக அரசுதான் காரணம் என்கிறார்கள். ஜெயலலிதா 2004இல் இல்லங்கள் தோறும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டு வந்தபோது கொச்சைப்படுத்தி பேசியவர்தான் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. அன்று அந்தத் திட்டத்தை உலகமே உற்று கவனித்தது. 2011இல் அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கே.சி வீரமணி செய்தியாளர் சந்திப்பு

வேலூரில் குடிநீர் பிரச்னை இல்லை. கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் ஆய்வு செய்துவருகிறார். திமுகவினர் கடந்தத் தேர்தலில் பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகளை கொடுத்தனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தாராளமாக வரும் அந்த தண்ணீர்தான் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

கூட்டுக் குடிநீர் திட்டத்தை பொறுத்தவரையில் மக்கள் தொகை பெருக்கம் ஆனாலும் அடுத்த 30 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும் அளவுக்கு பெரும் திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நீரினால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் கிடையாது. உபரியாக இருக்கக்கூடிய தண்ணீரைத்தான் சென்னைக்கு அனுப்பஇருக்கிறார்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details